Wednesday, June 25, 2008

தற்கொலைப்படையை உருவாக்கும் சிவசேனா!கொந்தளிக்கும் இந்தியா!!---சத்தியவேந்தன்

பால்தாக்கரே என்ற பழம்பெரும் (ச்சாளி) பயங்கரவாதியின் தேசத்துரோக ஒற்றுமை குலைக்கும், வெறியூட்டும் செயல்கள் சமீபத்தில் எல்லை மீறியுள்ளது.
ஹிந்துத்துவா தற்கொலைப்படை அமைக்க வேண்டும் என அபாயகரமான கருத்தை வெறியுடன் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நவி மும்பையிலும், தானேயிலும் குண்டுவைத்த சங் பயங்கரவாதி களின் செயல்கள் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது என்றும் விவஸ்தையில்லாமல் உளறியுள்ளார்.
குட்டிப் பாகிஸ்தானாக ஏழை வங்காள மக்கள் வாழும் பகுதிகளை வர்ணிக்கும் பால்தாக்கரே அங்கெல்லாம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் பிதற்றியுள்ளார்.
பால்தாக்கரேயின் வெறித்தனமான இந்தக் கருத்தை சிவசேனாவின் அதி காரப்பூர்வ இதழான சாம்னாவில் தலையங்கமாக எழுதியிருக்கிறார்.
இவரது இந்த வெறிக்கருத்து வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் ஆத்திர அலைகள் பற்றிப் பரவுகிறது.
நடுநிலையாளர்களும், பல்வேறு அமைப்புகளும் 'சிவசேனா தற்கொலைப் படைகள்' விவகாரம் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது கண்டனத்தை அழுத்த மாகப் பதிவு செய்துள்ளது. பால்தாக்க ரேயை கைது செய்யாவிட் டால் மக்கள் சக்தியைத் திரட்டி போராடப் போவதா கவும் அது எச்சரித்துள்ளது.
பால்தாக்கரே என்ற பயங்கரவாதி யின் வெறித்தூண்டுதல் இது முதல் முறையல்ல.
35 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக் கணக்கான தமிழர்களை மும்பையிலிருந்து விரட்ட காரணமாக இருந்தவர். தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழித்த பாசிச பயங்கரவாதி பால்தாக் கரே தண்டிக்கப்படவில்லை.
1993ல் மும்பையில் இவரது தூண்டு தலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை படுகொலை வெறியாட்டத்தில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. மும்பை கலவரம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷன் மும்பை படுகொலைகளின் பின்னணியில் பால்தாக்கரேயின் சதிக்கரங்கள் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
பைத்தியம் பிடித்த குரங்குகள் குடித்த கதை போல பிதற்றித்திரியும் இவரை அடக்கி வைக்காவிட்டால் நாட்டில் மேலும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற அதுவே முழுமுதற் காரணமாகிவிடும்.
மும்பையில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் தற்கொலைப்படைகளை உருவாக்குவேனென கூறும் வெறியனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
சுளுக்கெடுக்கும் வேளை இது. தாமதித்தால் சூழ்ச்சிகள் சூழத் தொடங்கிவிடும். பயங்கரவாதிகளை சுளுக்கெடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது. மத்திய அரசே உஷார்!

பதிப்பு : தமுமுக


No comments: