Monday, May 25, 2009

கடையநல்லூர், அதிரை மற்றும் நாமக்கலில் ஆர்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக குண்டர்களை கண்டித்து கடைய நல்லூர், அதிராம்பட்டினம் மற்றும் நாமக்கலில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர்


அதிராமப் பட்டிணம்


நாமக்கல்


நன்றி : த.மு.மு.க இணையதளம்.

ம.ம.க.வினர் மீது பொய் வழக்குகள்மத்திய சென்னை வன்முறை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
திமுக கும்பல் ஒன்று கள்ள ஓட்டுப் போட முயன்றுள்ளது. இதை தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங் களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி யுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியுள்ளது.

இதுதான் சிறுபான்மையினரை பாது காக்கும் செயலா? இவர்தான் சிறுபான் மையினரின் பாதுகாவலரா? இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது திமுகவினர் நடத்தியுள்ள கொலைவெறித் தாக்குதல் களுக்கு எனது கடுமையான கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களை விரட்டியடித்துவிட்டு கள்ள ஓட்டு போட முயன்ற கும்பலை மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியினரும் போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளனர். அப் போது ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கள்ள ஓட்டு போட வந்த கும்பல் கடுமையாகத் தாக்கியுள் ளது. 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைத் தாக்குதலும், இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போலீசாரின் செயலும் கண்டிக்கத்தக்கது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சென்னையில் ஆளும் கட்சி குண்டர்களும், ரவுடிகளும் திட்டமிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உருட்டுக் கட்டைகளாலும் இரும்புக் குழாய்களாலும் தாக்கியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்
இது திட்டமிட்ட வன்முறைத் தாக்கு தலாகும். முதலமைச்சரின் பேரன் போட்டியிடுகின்ற தொகுதி என்பதால் சிறு பான்மை மக்கள் மீது ஆத்திரத்தோடு திமுக குண்டர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சியினர் மீது ஆளும் கட்சி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, குற்றவாளி கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் நடத்தப்பட்ட அராஜகத்துக்கு விளைவுகளை அனுப விக்க நேரும் என எச்சரிக்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
மனிதநேய மக்கள் கட்சியினர் மீது நடந்த தாக்குதலைக் கண்டிப்பதோடு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்பு களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
நன்றி: த.மு.மு.க இணையதளம்.

P.J.P = B.J.P ஒற்றுமைகள் ஓர் ஆய்வு (மீள் பதிவு)



குஜராத் படுகொலைக்கு பின் சென்னையில் நடந்தஒரு ஜீம்மா பிரசங்கத்தில் பி.ஜெயினுல்லாபுதீன் "குஜராத்தில் இரயிலை முஸ்லிம்கள் எரித்ததால்தான் அவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுகின்றார்கள்" என்று குஜராத்தில் முஸ்லிம்கள் மீது மோடியால் நடத்தப்பட்ட அக்கிரமத்தை நியாயப்படுத்திப் பேசினார்.

ஆனால் இன்று நீதி விசாரனையோ இரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் நடத்தப்படவில்லை என்று கண்டறிந்து அறிவித்துள்ளது என்பதை மக்களுக்கு நிணைவுப் படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

மோடி: ஆஹா என்ன பொருத்தம்! நமக்குள் இந்தப் பெருத்தம்!!
பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கொள்ளை அடிப்பது சுகமே!!மோடி,பி.ஜெ.: ஆஹா என்ன பொருத்தம்!
மோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே!
பி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே !
மோடி: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கிடைத்ததை சுருட்டுவது சுகமே.
மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

நன்றி : தமிழ்நாட்டில் ஏகத்துவ எழுச்சி. நன்றி: அதிரை போஸ்ட்

வெற்றியை இழந்திருக்கிறோம் களத்தை இழக்கவில்லை ! நிகழ்காலம் கைவிட்டிருக்கலாம் எதிர்காலம் நமதே! இன்ஷாஅல்லாஹ் !!!

15வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் கொள்கைகளில் சிறிய அளவு வித்தியாசம்தான் இருந்தாலும், பாஜகவுக்கு காங்கிரசு கட்சி பரவாயில்லை என்ற அளவில் சிலர் நிம்மதி அடையலாம்.
எனினும் லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இடதுசாரிகள், தெலுங்குதேசம் என மூன்றாவது, நான்காவது அணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு புதிய அணி ஆட்சியமைத்திருந்தால் அது ஒடுக்கப்பட்ட, நலிந்த மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
இது நடைபெறாவிட்டாலும், பாசிச சக்திகள் முடக்கப்பட்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி பீஹாரில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. 1989ல் ராம்விலாஸ் பாஸ்வான் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் நான்கரை லட்சத்துக் கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
பணபலமும், படைபலமும் கொண்ட இக்கட்சி கள் கூட்டணி பலத்துடன் நின்று தோல்வியைத் தழுவியிருக்கும் போது மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது ஆச்சரியமில்லை.
அரசியலில் தோல்விகள் தவிர்க்க முடியாதது. திமுக 1957ல் போட்டியிட்டபோது, வெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிற இடங்களில் படுதோல்வி அடைந் தது. டெபாசிட்டை பறிகொடுத்தது.
1991ல் பா.ம.க. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதி யில் வெற்றி பெற்று பிற இடங்களில் படுதோல் வியை சந்தித்து டெபாசிட்டை இழந்தது.பல அரசியல் கட்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. பலர் படுதோல்விகளை சந்தித்திருக்கிறார்கள்.
டெபாசிட் தொகைகளை இழந்த கட்சிகள் பின்னாளில் ஆளுங்கட்சிகளாகவும், எதிர்க்கட்சிகளாகவும் அதிகாரத்தை ஆட்டுவிக்கும் கட்சிகளாக வும் மாறியிருக்கின்றன.
இன்று தமிழகத்தில் பிரபல கட்சியாகத் திகழும் தே.மு.தி.க. இத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்திருக்கிறது.
கட்சி ஆரம்பித்து தொடர் தோல்விகளை சந்தித்த மதிமுக வெகு காலத்திற்குப் பின்புதான் அரசியல் அங்கீகாரம் பெற்றது.
1991 சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே திமுக தப்பிப் பிழைத்தது.
1984 தேர்தலுக்குப் பின்னால் உ.பி. மாநிலத்தில் படுதோல்விகளையும், மந்தமான வாக்குகளையும் பெற்றுவந்த காங்கிரஸ் இப்போதுதான் 20 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது.
இந்திரா காந்தி, காமராஜர், அண்ணா போன்ற பிரபலங்கள் எல்லாம் தேர்தலில் தங்கள் தொகுதி களில் தோற்றவர்கள் என்பதை நினைவூட்டு கிறோம்.
மாபெரும் அறிவுஜீவிகளாக கருதப்படும் ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டவர்கள் என்பதும், பிறகு அவர்கள் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் ஆனார்கள் என்பதும் வரலாறு.
இன்று பிரபல தலைவர்களாக உள்ள ஸ்டாலின், ஜெயலலிதா, வைகோ போன்றவர்கள் களத்தில் தோல்வி கண்டு மீண்டவர்கள்தான்.
தேர்தல் களம் என்பது தோல்வி, படுதோல்வி, விரக்தி, ஏமாற்றம் இவையாவையும் உள்ளடக் கியது என்பதை மறந்துவிடலாகாது. இதை ஒரு சவாலாக ஏற்றால்தான் அடுத்த வெற்றிகளைக் குவிக்க முடியும்.
தேர்தலைப் பற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டவர்களுக்கும், போராட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டு லட்சியத்துக்காக அரசியலுக்கு வந்திருக்கும் ம.ம.க. தொண்டர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
இனிதான் நமக்கு பணிகள் அதிகமாக காத்திருக் கிறது. காடுகளைக் கடந்து விட்டோம். இனி மேடுகளைத் தாண்ட வேண்டும்.
போர் வீரர்களுக்கு ஓய்வில்லை. ம.ம.க.வினருக்கு தோல்வி இல்லை.

நன்றி : த.மு.மு.க இணையத்தளம்.