Sunday, August 10, 2008

அதிரை த.த.ஜ வும் கிறிஸ்தவ பாதிரியும்!

"ததஜவின் இரண்டாவது ஹீரோ பாக்கரைப் பற்றி மட்டும் கண்டுக்கொள்ளாதது ஏன்? அவர்மீது எத்தனை பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரியாதா உங்களுக்கு? அவரை ஒரு பெண்னுடன் தவறாக சென்றதாக வந்த குற்றச்சாட்டிற்காக சில நாட்கள் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக்கிவிட்டு (உள்ளுக்குள் என்ன நடந்ததோ) சில நாட்கள் கழித்து மீண்டும் பதவியில் சேர்க்கப்பட்டார். அது ஏன்?" என்று அதிரை எக்ஸ்ப்ரஸில் அபு பக்கர் என்பார் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அதிரை த.த.ஜ வை சேர்ந்தவர்கள், "பாக்கர் செய்தது தவறு என்று எல்லாருக்கும் தெரியும். பாக்கர் தான் செய்த தவருக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டவில்லை. அதனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எல்லா இயக்கங்களிலும் இது போன்ற தவறை செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ததஜ வை மட்டும் தான், நீங்கள் பெரிது படுத்துவீர்கள்." என விளக்கம் கொடுத்துள்ளார்கள்...! அதாவது, எல்லா இயக்கத்திலும் தீயவர்கள் உள்ளார்கள் எனவே, இது என்ன இதை விட இமாலய குற்றம் செய்து அதற்கு, மார்கத்தை காரணம் காட்டாமல் இருத்தால் ஏற்றுக்கொள்வோம்...!என்கிற தொனியில் கூறியிருக்கிறார்கள். பத்து ரூபாயை கிறிஸ்தவ பாதிரியிடம் கொடுத்து "மண்ணித்து விடும்" என்றதும் "உன் மண்ணிப்பை ஆண்டவர் ஏற்றுக்கொன்டார்" என்பார் கிராமத்து பாதிரி! அதுப்போல் அல்லவா இருக்கிறது.?

நன்றி : அதிரை போஸ்ட் இணையத்தளம்.

ததஜ ஹீரோ பீ.ஜெயும் உளவுத்துறையும்!

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பள்ளிவாசளைக் கைப்பற்றுவதற்காக தொழுகையைத் தடுக்கும் அநியாயத்திற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்.,உங்கள் ததஜ ஹீரோ பீஜே தனது எதிரி என்பதால் அவர்களை அரசுக்கு காட்டிக்கொடுத்து தனது கோபத்தை தீர்த்துக் கொள்வதுடன்;, மக்கள் தனது எதிரிகளை இழிவாக கருதவேண்டும் என்பதற்காக மாற்றி மாற்றி பேசும் பொய்களைப் பாருங்கள்.,//அதிரை ட்ரூத் மற்றும் ததஜ சம்பந்தமாக வினவியுள்ள கேள்விகளுக்கு பதில்கள்,1. ததஜ வை சார்ந்து அதிரை ட்ருத் நடத்தப்படவில்லை. ததஜ வில் உள்ளவர்களும் அதிரை ட்ருத் வலை தளத்தில் பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்.//அதிரை ட்ருத் முழுக்க முழுக்க அதிரை தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்களாலேயே நடத்தப்படுகின்றது என்பது தான் உன்மை. வேண்டுமானால் பெயருக்காக ஒரு சிலரை சேர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள்கூட அந்த தளத்தில் தவ்ஹீத் ஜமாஅதின் தவறுகளை சுட்டிக்காட்டி எதிர்த்து எழுத முடியாது என்பதுடன் அந்த ஜமாத்திற்கு ஆதரவாக மட்டுமே உங்கள் தளத்தில் செய்தி வெளியிடப்படும் என்பதே உன்மை. அதற்கு ஒரு சாண்று நீங்கள் இந்த கமென்டிலேயே தவ்ஹீத் ஜமாத்தைக் காப்பாற்றுவது போண்று தான் எழுதியுள்ளது. குறிப்பாக பாக்கர் செய்த செயலுக்கு மார்க்கம் காரணமாக சொல்லப்படவில்லை என்று சொல்லியுள்ளதும், அவர் போண்றோர் பல இயக்கத்திலும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்று எழுதியுள்ளதும், குர்ஆன் ஹதீசை போதிக்கக்கூடிய சகோதரர்கள் நடத்தும் பள்ளியில் ஜமாத் தொழுகை நடத்தப்பட்டபொழுது தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தலைவர்களால் குறுக்கே உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு செய்ததை நியாயப்படுத்தி நீங்கள் எழுதியுள்ளதிலிருந்தே உங்கள் தளம் எந்த கொள்கைச்சார்ந்தது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. //2. நடுத்தெரு சிஷ்தியைப் பற்றி கருத்துக் கணிப்பு நடத்தும், நீங்கள் ததஜ வின் பாக்கரின் தவரைப் பற்றி ஏன் கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்று வினவியுள்ளீர்கள். சிஷ்தி தான் செய்யும் செயலுக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டுகிறார், பாக்கர் செய்தது தவறு என்று எல்லாருக்கும் தெரியும். பாக்கர் தான் செய்த தவருக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டவில்லை. அதனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எல்லா இயக்கங்களிலும் இது போன்ற தவறை செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ததஜ வை மட்டும் தான், நீங்கள் பெரிது படுத்துவீர்கள்.//பாக்கர் தவறு எல்லோருக்கும் தெரியும் என்றப்பிறகு உங்கள் தவ்ஹீத் ஜமாத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்காக விளக்கப்பட்ட சிறிது காலத்திலேயே (உலகத்திலேயே உன்மையான இஸ்லாத்தைப் பின்பற்றிக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்ட ஜமாத்திற்கு) பொதுச்செயலாளராக ஆக்கியது ஏன்? வெட்கமாக இல்லையா? இது போன்றவர்கள் பல இயக்கங்களிலும் இருக்கின்றார்கள் என்று சொல்வது தான் உங்கள் இஸ்லாமியப் பற்றா? மார்க்கத்தைப் போதிக்கக்கூடிய இயக்கங்களிலேயே இது போன்றவர்கள் இருக்கும் போது பொது மக்கள் கூடும் தர்காவில் நடக்கும் சில்மிஷ விளையாட்டை கண்டிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது என்று தர்கா ஆதரவாளர்கள் கேட்டுவிட மாட்டார்களா? ததஜ மத்ஹப்பை விட்டு வெளியே வாருங்கள் சகோதரர்களே! அதில் இருந்துக்கொண்டு யாரைப்பற்றியும் கேட்கும் அருகதை உங்களுக்கு இல்லை என்பது தான் எனது கருத்து.//3. அடுத்தாக, அதிரை ட்ரூத், நமது ஊர் அதிரையில் உள்ள மார்க்கத்திற்கு மாற்றமான பிரச்சனைகளை அம்பலபடுத்தி, அதை சீர்திருத்துவது தான் அதன் நோக்கம்//உங்கள் தலைமையிடம் அசிங்கத்தை வைத்துக்கொண்டு மற்றவனைத் திருத்துவது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. அந்த கழிசடைகளை ஒதுக்கிவிட்டு மற்றவர்களைத் திருத்த முயலுங்கள்.//4. ததஜ ஏன் தனி பெருநாள் தொழுகை நடத்த ஆரம்பித்தது என்று கேட்டுள்ளீர்கள்? தவ்ஹீத் சகோதரர்களால் நடத்தப்படும் பெருநாள் தொழுகையில் ததஜ வின் பேச்சாளர்களுக்கு மட்டும் அனுமதி தர மறுத்தார்கள். ததஜ எங்கள் பேச்சாளர்கள் மட்டும் தான் பேச வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, ஒரு பெருநாளிலாவது, எங்களின் பேச்சாளர்களையும் அனுமதியுங்கள் என்று கேட்டது, அதை அவர்கள் மறுத்தார்கள்.//இது மிகத் தவறான தகவல். உன்மையில் என்ன நடந்தது என்றால் பெருநாள் தொழுகையை ததஜ பெயரிலேயே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் அதிரை ததஜவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் துபையிலிருந்து வந்த ததஜவினரும் அடக்கம். (பெயர் வெளியிட விரும்பவில்லை. தேவைப்பட்டால் பெயர் வெளியிடப் படும்) அப்பொழுது (ஈத் தொழுகையை தொடர்ந்து நடத்தி வரும் தற்போது எந்த இயக்கத்தையும் சாராத) அதிரை ஈத் கமிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் உங்கள் தாயி அஷ்ரப்புதீன் ஃபிர்தவ்சியே தொழுகையும் நடத்தட்டும், பயானும் செய்யட்டும், ஆனால் ஈத் கமிட்டி என்றப் பெயரிலேயே ஒரே இடத்தில் நடத்துவோம் என்று சொன்னதற்கு, அதை ஏற்றுக்கொள்ளாத அதிரை ததஜவினர், எங்களுக்கு தனித்தன்மைத் தான் முக்கியம், நாங்கள் எங்கள் பெயரிலேயே தனியாகவே நடத்துவோம் என்று கூறிவிட்டனர். இது தான் நடந்தது. ஒரு வாதத்திற்காக நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒரு பேச்சாளரை அழைக்கவில்லை என்பதற்காகவெல்லாம் ஊர்கூடி தொழும் தொழுகையைப் பிரித்து குழப்பம் செய்வது தான் உங்கள மார்க்கமா? அந்த தொழுகை இது வரை நடத்தப்பட்டதில் எந்த பேச்சாளராவது நீங்கள் சொல்லக்கூடிய தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக பேசியுள்ளார்களா? என்ன கொள்கையோ உங்கள் தவ்ஹீத் கொள்கை, புரியவில்லை சகோதரா? //5. ததஜ ஒரு பள்ளியை அபகரிக்க பார்க்கிறது என்று குற்றம்சாட்டி, ஒரு வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். இதற்கு, மறுப்பாக ததஜ வும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது, ஆதாரத்துடன், அதையும் கொஞ்சம் பாருங்கள். உண்மை தெரியும். ஜாக் தவ்ஹீத் எதிராக சென்று கொண்டுருக்கிறது. மட்டுமல்லாமல், எல்லா தவ்ஹீத் சகோதரர்களாலும் சேர்ந்து கட்டப்பட்ட பள்ளியை ஜாக் தான் அபகரித்தது முதலில், அது தான் பிரச்சனைக்கு காரணம். ஒரு சாராரின் பேச்யை கேட்டுவிட்டு, அதை அப்படியே பரப்பாதீர்கள்.//எந்த அளவுக்கு உங்களுக்கு ஜமாத் வெறி முற்றிவிட்டது என்று பார்த்தீர்களா சகோதரா! முதலில் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்துக்கொள்ளுங்கள். அந்த வீடியோவில் பீஜேயும் சைபுல்லாஹ் ஹாஜாவும் அந்தப் பள்ளி சம்பந்தமாக முரண்பட்டு பேசுவது மிகத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. மட்டுமல்ல இவர்கள் அளித்துள்ள பதில் சீடியில் அந்த முரண்பாட்டிற்கு எந்த மறுப்பும் கொடுக்கப்படவில்லை. அது மட்டுமல்ல அது ஜாக்கிற்கு சொந்தமானது என்று கோர்ட் தீர்ப்பு வந்தப்பிறகுதான் உங்கள் ஜமாத்தின் உயர்மட்ட தலைவர்களின் தலைமையில் அந்த தொழுகையைத் தடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விஷயத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்போம் என்று சொன்னவர்கள் முஸ்லீம்களின் ஒற்றுமை விஷயத்ல் அது போல் கோர்ட் தீர்ப்பை மதிக்க மறுப்பது ஏன்? முஸ்லீம்கள் தானே இழிச்சவாயர்கள் உங்கள் ஜமாத்தார்களுக்கு. அதனால் தான் அந்த அக்கிரமத்தை நடத்திக் காட்டினர். ஒரு வாதத்திற்காக அந்த பள்ளி விவகாரத்தில் ஜாக் மீது தவறு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக பள்ளிவாசல் சார்பாக ஜமாத் தொழுகை நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த தொழுகையை தடுத்துதான் உங்கள் வீரியத்தை காட்ட வேண்டுமா? இது தான் உங்கள் தவ்ஹீதோ! இதைத்தான் உங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் கற்றுத்தரும் பாடமோ! உஙகள் ஜமாத்தினரை திருத்துவரை விட்டுவிடுவோம். தவ்ஹீத் ஜமாத்தினரின் தொழுகை தடுப்பு போராட்டத்திற்கு ஆதரித்து எழுதியதற்காக நீங்களே முதலில் தவ்பா செய்துக்கொள்ளுங்கள். நான் மற்றொரு லிங்க் கொடுத்திருந்தேன். பீஜே உளவுத்துரையிடம் சகோதர இயக்கத்தினரை காட்டிக்கொடுப்பதும், அவர்கள் தங்கள் எதிரிகள் என்றிருப்பதால் அவர்களைப் பற்றி பொய்யான செய்திகளை முரண்பாடாக தெரிவிப்பதும் குறித்து ஒரு வீடியோ ஆதாரமும் கொடுத்திருந்தேன். அது பற்றி நீங்கள் வாய் திறக்கவில்லை என்பதிலிருந்தே அவர் ஒரு மகா கொடிய பொய்யர் என்பதை உங்கள் உள் மனது ஒத்துக்கொண்டுள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!ஆபூபக்கர், துபை

நன்றி : அதிரை போஸ்ட் இணையத்தளம்.