Tuesday, May 13, 2008

உதயமானது தமுமுக மகளிர் அணி...

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்!
எழுச்சிகரமான தீர்மானங்களுடன் கூடிய தமுமுக மகளிர் அணி மாநில செயற்குழு


சமுதாயத்தில் நடக்கும் அநியாயங் களை தட்டிக் கேட்பதற்கும், மறுக்கப் பட்ட உரிமைகளைப் போராடி பெறுவதற் கும் சமுதாய ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற முஸ்லிம் பெண்களின் போர்க்குரல் தமுமுக மாநில மகளிரணி செயற்குழுவில் எதிரொலித்தது. இஸ்லாமிய அடிப்படையில் சமுதாயத் தொண்டாற்றிட மகளிருக்கும் களம் அமைத்து கொடுப்பதற்கான முதன் முயற்சியாக மகளிரணியின் மாநில செயற்குழு திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள ஜெம் பேலஸ் அரங்கில் கடந்த 27.04.2008 அன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 80 பெண்கள் மாவட்ட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில், சகோதரி சாஜிதா அவர்களின் திருக் குர்ஆன் விளக்கவுரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. சகோ.கோவை சாதிக் அறிமுக உரை நிகழ்த்தினார். தமுமுக வின் செயல்பாடுகள் மற்றும் பொதுவான தலைப்புகளில் சகோதரிகளின் கேள்விகளுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி பதிலளித்துப் பேசினார். மகளிர் அணி தொடர்பான பல்வேறு விளக்கங்களும் சகோதரிகளின் ஆலோசனைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தங்கள் சமுதாயப் பணிக்கு எங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப் பும் தேவை என நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆபாச, கலாச்சார சீர்கேடுகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களை தடை செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். 20லி20 கிரிக்கெட் போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஆடும் ஆபாச நடனத்தை நிறுத்த வேண்டும், விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுடன் எழுச்சியாக தொடர்ந்த செயற்குழுவில் இறுதியாக தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நிறைவுரையாற்றினார். முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய கட்டமைப்பில் பேணுதலாக சமூக பணிகளை ஆற்றுவது எப்படி என்று விளக்கிய பேராசிரியர் அவர்கள், ஸஹாபா பெண்கள் வாழ்விலிருந்து மேற்கோள்களை காட்டி மகளிர் அணி செயல்பட வேண்டிய விதத்தை எடுத்துரைத்தார்.

சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார சீர்கேடுகள், முஸ்லிம் பெண்களிடையே உள்ள மூடநம்பிக்கைகள், சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களின் மீதான மோகம் ஆகியவற்றை ஒழிக்கவும் மார்க்க மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் சூளுரைத்தவர்களாக, மகளிர் அணி வீராங்கனைகள் புறப் பட்டனர். முஸ்லிம் சமுதாயத்தின் சரிபாதி யாக உள்ள முஸ்லிம் பெண்களிடையே மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக் கையை மகளிர் அணி செயற்குழு ஏற்படுத்தியுள்ளது.
செயற்குழுவுக்குப்பின் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. செயற்குழுவுக் கான ஏற்பாட்டை திருச்சி மாவட்டத் தலைவர் ஹக்கீம், செயலாளர் அப்துர் ரஹீம், பொருளாளர் பைஸ் அஹ்மது தலைமையிலான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



மகளிர் அணி நிர்வாகிகள்

மாநில மகளிர் அணிச் செயலாளர் சகோதரி. கோவை சாஜிதா (க/பெ.கோவை சாதிக் மாநில துணைச் செயலாளர்)

மாநில மகளிர் அணி பொருளாளர் : டாக்டர் எஸ்.ஷமீமா (க/பெ.பொறியாளர் ஷாநவாஸ் குவைத் மண்டலச் செயலாளர்)

து.செயலாளர் : சகோதரி ரஹ்மத் நிஷா ஆலிமா (க/பெ. மர்ஹும் அப்துர் ரஹீம்)

து.செயலாளர் : சகோதரி ஷரீபா (க/பெ.ஜைனுல் ஆபிதீன் மாநில செயற்குழு உறுப்பினர்)

No comments: