Monday, May 25, 2009

ம.ம.க.வினர் மீது பொய் வழக்குகள்மத்திய சென்னை வன்முறை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
திமுக கும்பல் ஒன்று கள்ள ஓட்டுப் போட முயன்றுள்ளது. இதை தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங் களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி யுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியுள்ளது.

இதுதான் சிறுபான்மையினரை பாது காக்கும் செயலா? இவர்தான் சிறுபான் மையினரின் பாதுகாவலரா? இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது திமுகவினர் நடத்தியுள்ள கொலைவெறித் தாக்குதல் களுக்கு எனது கடுமையான கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களை விரட்டியடித்துவிட்டு கள்ள ஓட்டு போட முயன்ற கும்பலை மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியினரும் போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளனர். அப் போது ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கள்ள ஓட்டு போட வந்த கும்பல் கடுமையாகத் தாக்கியுள் ளது. 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைத் தாக்குதலும், இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போலீசாரின் செயலும் கண்டிக்கத்தக்கது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சென்னையில் ஆளும் கட்சி குண்டர்களும், ரவுடிகளும் திட்டமிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உருட்டுக் கட்டைகளாலும் இரும்புக் குழாய்களாலும் தாக்கியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்
இது திட்டமிட்ட வன்முறைத் தாக்கு தலாகும். முதலமைச்சரின் பேரன் போட்டியிடுகின்ற தொகுதி என்பதால் சிறு பான்மை மக்கள் மீது ஆத்திரத்தோடு திமுக குண்டர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சியினர் மீது ஆளும் கட்சி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, குற்றவாளி கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் நடத்தப்பட்ட அராஜகத்துக்கு விளைவுகளை அனுப விக்க நேரும் என எச்சரிக்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
மனிதநேய மக்கள் கட்சியினர் மீது நடந்த தாக்குதலைக் கண்டிப்பதோடு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்பு களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
நன்றி: த.மு.மு.க இணையதளம்.

No comments: