Wednesday, May 14, 2008

விளம்பர நோக்கிற்காக செயல்படும் அமைப்பு ததஜ

விளம்பரத்துக்காக வழக்கு: த.த.ஜ.விற்கு உயர்நீதிமன்றம் அபராதம்!

சென்னைப் பல்கலைக் கழகத்தின் பணிநியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றவில்லை, எனவே, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என அறிவிக்கக்கோரி த.த.ஜ.வின் வக்கீல் சிராஜுதீன் மூலம் அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் செய்யது இக்பால் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகோபாத்தியாயா, எம். வேணுகோபால் ஆகியோர், பணியிடங்கள் தொடர்பாக பொதுநல வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பாக நாளிதழ்களில் இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளதால் இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே வழக்கு தாக்கல் செய்த த.த.ஜ மாநிலச் செயலாளர் செய்யது இக்பால் 10 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தில் 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

விளம்பர நோக்கிற்காக செயல்படும் அமைப்பு என்று உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ததஜ) என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்