Sunday, August 10, 2008

அதிரை த.த.ஜ வும் கிறிஸ்தவ பாதிரியும்!

"ததஜவின் இரண்டாவது ஹீரோ பாக்கரைப் பற்றி மட்டும் கண்டுக்கொள்ளாதது ஏன்? அவர்மீது எத்தனை பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரியாதா உங்களுக்கு? அவரை ஒரு பெண்னுடன் தவறாக சென்றதாக வந்த குற்றச்சாட்டிற்காக சில நாட்கள் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக்கிவிட்டு (உள்ளுக்குள் என்ன நடந்ததோ) சில நாட்கள் கழித்து மீண்டும் பதவியில் சேர்க்கப்பட்டார். அது ஏன்?" என்று அதிரை எக்ஸ்ப்ரஸில் அபு பக்கர் என்பார் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அதிரை த.த.ஜ வை சேர்ந்தவர்கள், "பாக்கர் செய்தது தவறு என்று எல்லாருக்கும் தெரியும். பாக்கர் தான் செய்த தவருக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டவில்லை. அதனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எல்லா இயக்கங்களிலும் இது போன்ற தவறை செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ததஜ வை மட்டும் தான், நீங்கள் பெரிது படுத்துவீர்கள்." என விளக்கம் கொடுத்துள்ளார்கள்...! அதாவது, எல்லா இயக்கத்திலும் தீயவர்கள் உள்ளார்கள் எனவே, இது என்ன இதை விட இமாலய குற்றம் செய்து அதற்கு, மார்கத்தை காரணம் காட்டாமல் இருத்தால் ஏற்றுக்கொள்வோம்...!என்கிற தொனியில் கூறியிருக்கிறார்கள். பத்து ரூபாயை கிறிஸ்தவ பாதிரியிடம் கொடுத்து "மண்ணித்து விடும்" என்றதும் "உன் மண்ணிப்பை ஆண்டவர் ஏற்றுக்கொன்டார்" என்பார் கிராமத்து பாதிரி! அதுப்போல் அல்லவா இருக்கிறது.?

நன்றி : அதிரை போஸ்ட் இணையத்தளம்.

No comments: