Monday, June 30, 2008

மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!


கட்டை கட்டையாய்ஒட்டுத்துணியுடன்ஓயாது உலாவருகின்ற‌இளைஞர் சமுதாயமே! - ஒரு கணம்மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!

பாசமெனும் பள்ளியறைக்குள்நேசம் எனும் நெருக்கத்தினால்மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற‌மாந்தர்களின் மண்ண‌றையை நினைத்துப்பார்!

நித்திரையின்றி நித்தம் நித்தம்நெருங்க முடியா சத்தம் சத்தம்வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அதுமண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.

நாக‌ரீக‌ம் எனும் நாச‌த்தினால்நாள் தோறும் வ‌ரும் வேச‌த்தினால்காத‌ல் என்று கைகோர்த்து - இதும‌ண்ண‌றையை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் காத்திருப்பு.
மார்க்க‌த்தில் ம‌ந்தைக‌ளாக‌உல‌க‌த்தில் உத்த‌ம‌ராக‌உலா வருகின்ற‌ இளைஞ‌ர்க‌ளே!ம‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை நினைத்துப்பார்!

ம‌துவுக்குள் மாட்டிதின‌ந்தோறும் அதில் மூழ்கிமுதுமை எனும் முதுகு உண‌ர்த்தினால் மார்க்க‌த்தை ம‌ற‌ந்த‌ம‌டைய‌ர்க‌ளின் ம‌ண்ண‌றையை நினைத்துப்பார்!

ஆடையில் ஆர‌றை குறைப்புஅதில் ஓரிரை ம‌றைவுபாரினில் பாழ‌டைந்த‌வ‌ர்க‌ளின் ந‌டிப்பு - இதும‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் நினைப்பு!

இளைஞ‌ர் கூட்ட‌மே!இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்இருப்பைக் காவுகொள்ளும் கொடூர‌ம் நிறைந்த‌ம‌ர‌ண‌த்தை ம‌ற‌ந்து வாழ்வின் அர்த்த‌த்தை இழந்துவிடாதே!

மரணத்தை நினைத்துப்பார்!

அன்புட‌ன்
எம்.எச்.ப‌ஸ்மிய்யா

அல்குர்ஆன் விரிவுரைக்கான‌ க‌ற்கை வ‌குப்பு மாண‌வி

கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம்


தமுமுக கிருஷ்ணகிரி நகரம் சார்பாக கடந்த 14.6.2008 அன்று கிருஷ்ணகிரி பழையபேட்டை பூரா மசூதி அருகில் 'சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்' நடைபெற்றது. இதில் தமுமுகவின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவருமான செ. ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இக் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் அணி செயலாளர் வழக்கறிஞர் அன்வர், வேலூர் மாவட்ட உலமா அணி செயலாளர் எஸ்.எஸ். நாசர் உமரி மற்றும் கிருஷ்ண கிரி, தர்மபுரி, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நன்றி :பதிப்பு தமுமுக இணைத்தளம்.

Sunday, June 29, 2008

அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம் - இன்றும் அதிர்ந்தது

டெல்லி: அந்தமானில் இன்று அதிகாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களாகஅடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 5 முதல் 6.7 வரையிலான ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று காலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 5.1 ரிக்டராக இருந்தது. காலை 6.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ் .

Wednesday, June 25, 2008

அல்லாஹ் காப்பற்றுவானாக ஆமீன்...


தற்கொலைப்படையை உருவாக்கும் சிவசேனா!கொந்தளிக்கும் இந்தியா!!---சத்தியவேந்தன்

பால்தாக்கரே என்ற பழம்பெரும் (ச்சாளி) பயங்கரவாதியின் தேசத்துரோக ஒற்றுமை குலைக்கும், வெறியூட்டும் செயல்கள் சமீபத்தில் எல்லை மீறியுள்ளது.
ஹிந்துத்துவா தற்கொலைப்படை அமைக்க வேண்டும் என அபாயகரமான கருத்தை வெறியுடன் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நவி மும்பையிலும், தானேயிலும் குண்டுவைத்த சங் பயங்கரவாதி களின் செயல்கள் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது என்றும் விவஸ்தையில்லாமல் உளறியுள்ளார்.
குட்டிப் பாகிஸ்தானாக ஏழை வங்காள மக்கள் வாழும் பகுதிகளை வர்ணிக்கும் பால்தாக்கரே அங்கெல்லாம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் பிதற்றியுள்ளார்.
பால்தாக்கரேயின் வெறித்தனமான இந்தக் கருத்தை சிவசேனாவின் அதி காரப்பூர்வ இதழான சாம்னாவில் தலையங்கமாக எழுதியிருக்கிறார்.
இவரது இந்த வெறிக்கருத்து வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் ஆத்திர அலைகள் பற்றிப் பரவுகிறது.
நடுநிலையாளர்களும், பல்வேறு அமைப்புகளும் 'சிவசேனா தற்கொலைப் படைகள்' விவகாரம் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது கண்டனத்தை அழுத்த மாகப் பதிவு செய்துள்ளது. பால்தாக்க ரேயை கைது செய்யாவிட் டால் மக்கள் சக்தியைத் திரட்டி போராடப் போவதா கவும் அது எச்சரித்துள்ளது.
பால்தாக்கரே என்ற பயங்கரவாதி யின் வெறித்தூண்டுதல் இது முதல் முறையல்ல.
35 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக் கணக்கான தமிழர்களை மும்பையிலிருந்து விரட்ட காரணமாக இருந்தவர். தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழித்த பாசிச பயங்கரவாதி பால்தாக் கரே தண்டிக்கப்படவில்லை.
1993ல் மும்பையில் இவரது தூண்டு தலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை படுகொலை வெறியாட்டத்தில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. மும்பை கலவரம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷன் மும்பை படுகொலைகளின் பின்னணியில் பால்தாக்கரேயின் சதிக்கரங்கள் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
பைத்தியம் பிடித்த குரங்குகள் குடித்த கதை போல பிதற்றித்திரியும் இவரை அடக்கி வைக்காவிட்டால் நாட்டில் மேலும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற அதுவே முழுமுதற் காரணமாகிவிடும்.
மும்பையில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் தற்கொலைப்படைகளை உருவாக்குவேனென கூறும் வெறியனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
சுளுக்கெடுக்கும் வேளை இது. தாமதித்தால் சூழ்ச்சிகள் சூழத் தொடங்கிவிடும். பயங்கரவாதிகளை சுளுக்கெடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது. மத்திய அரசே உஷார்!

பதிப்பு : தமுமுக


கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தமுமுகவினர் 500 பேர் கைது



கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் சேர்ந்த 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை புறநோயாளிகளும், ஆயிரத்து 500 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டம் மட்டுமல்லாது ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாக போக்கை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி முன்பு 24-ந் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி தமுமுக அறிவித்திருந்தது. இவர்களது ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்க வில்லை. போலீசார் அனுமதி கொடுக்கவிட்டாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று த.மு.மு.க. அறிவித்தது.இதை தொடர்ந்து நேற்று (24-06-08) காலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தண்ணீர் பீரங்கி வண்டிகள், வஜ்ரா வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டிருந்தன.ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் வரை த.மு.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஏராளமான த.மு.மு.க.வினர் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள பஸ்நிலையம் முன்பு குவியத்தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பின்னர் 11.15 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என்.கே.அஸ்ரப் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ஏ.அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் எம்.சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் இ.அகமது கபீர், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.காதர் உசேன், துணை செயலாளர் எஸ்.நூர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில செயலாளர் உமர் கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே "திடீரென்று" ஒருவரை ஸ்டெச்சரில் படுக்க வைத்த நிலையில் தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைசேர்ந்த 500 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் அவினாசி சாலையில் உள்ள ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய த.மு.மு.க. மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என்.கே.அஸ்ரப் கூறியதாவது:- அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வசதி படைத்தவர்கள் வருவதில்லை. தினக்கூலிகளாகவேலை பார்ப்பவர்கள் தான் வருகிறார்கள். பஸ்கட்டணத்திற்கே கடன் வாங்கி வரும் வறிய நிலையில் இருக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது இறைவனுக்கு அளிக்கும் தொண்டாகும். கோவை அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தை செம்மை படுத்த வேண்டும். பெண்கள் வார்டு கழிவறைக்கு சென்றால் இல்லாத நோயெல்லாம் வந்து விடும் நிலையில் உள்ளது.பிணவறையில்பல நாட்களாக குளிர்சாதன பெட்டி இயங்க வில்லை. இதனால் பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எம்.ஆர்.ஐ.ஸ்கேன்வசதி இருந்தும் அதை இயக்க ஊழியர்கள் இல்லை.பிரசவ வார்டில் 50 படுக்கைகள் மட்டுமே உள்ளன. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் படுத்துக்கிடக்கிறார்கள். நரம்பியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் படுக்கைகள் மோசமான நிலையில்உள்ளன. இவற்றை எல்லாம் சீர்படுத்தக்கோரிதான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் விரைவில் நல்ல முடிவு எடுக்க வில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் விரிவு படுத்தப்படும்.
இவ்வாறு என்.கே.அஷ்ரப் கூறினார்.
பதிப்பு : தமுமுக.

ராஜஸ்தானில் பொதுச்செயலாளர்!



ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 21.6.2008 அன்று சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற அனைத்து முஸ்லிம் பிரதி நிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்திலிருந்து தமுமுகவின் பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு இடஒதுக கீட்டின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பதிப்பு : தமுமுக.

முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்புக் கேட்ட ஒபாமா


அமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னணியில் நிற்கிறார். தடைகள் பல தகர்ந்து ஒரு கறுப்பின சமூகத்தைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கள் வரத் தொடங்கி யதுமே உலகெங்கும் குறிப்பாக கிழக்கு உலகத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அரசியல் மற்றும் பலம் நிறைந்த யூத லாபியை சமாளிக்க அந்தக் கூட்டத்துக்கு ஆதரவாக அவர் பேசத் தொடங்கினார். ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலம் (மஸ்ஜிதே அக்ஸா அமைந்த பகுதி) இஸ்ரேலின் தலைநகராக மாற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலமை இஸ்ரேலின் தலைநகராக மாற்றமுடியாது என்று முடிவு கட்டியே யூதர்கள் தங்களது தலைநகரமாக டெல்அவிவை அறிவித்த திலிருந்தே பாலஸ்தீனர்கள் உயிரே போனாலும் ஜெருஸ்ஸலமை முழுமையாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே யூதர்களே ஓய்ந்திருந்த பிரச்சினையை ஒபாமா கிளப்பினார்.
ஆனால் யாரும் இதை பொருட் படுத்தவில்லை. பாவம் ஒபாமா! ஓட்டுக் காக ஏதேதோ பேசுகிறார் என்றே கருதினர். அதனால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்கினர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு தனது பகிரங்க ஆதவை இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்த பிறகு மெக்கெய்னுக்கு இருந்துவந்த ஆதரவு மேலும் குறையத் தொடங்கியது. எல்லாமாகச் சேர்ந்து ஒபாமா வுக்கு வலு சேர்த்தது.
இந்நிலையில் ஹிஜாப் அணிந்த இரண்டு இஸ்லா மிய இளம் பெண் களிடம் பராக் ஒபாமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பிரச் சார பேரணிக்காக ஒபாமா தயாராகும் வேளையில் தொலைக்காட்சி காமெராக் கள் ஒபாமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் ஒபாமா எழுந்து நிற்க, பின்வரிசையில் அதிக மாகப் பெண்கள் அமரவைக்கப்பட்டிருந் தார்கள். (தாய்குலத்தின் ஆதரவைக் கவரும் முயற்சியாக இது கருதப்பட்டது) அந்நேரத்தில் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக ஒரு காட்சி அரங்கேறியது.
அரங்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு முஸ்லிம் இளம் பெண்கள் வலுக்கட்டா யமாக எழுப்பப்பட்டு, அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர். அந்த இரண்டு இளம்பெண்களும் ஹிஜாப் என்னும் தலைமுக்காடு அணிந்திருந்ததே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் முறையற்ற செயலுக்கு காரணமாக கூறப்பட்டது.
ஹிஜாப் அணிந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது.
ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் செய்த தவறுக்கு ஒபாமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் எழுந்தது.
அமெரிக்க முன்னணி முஸ்லிம் அமைப்பான 'கேர்' தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்தது. அமெரிக்கா வாழ் முஸ்லிம்களின் தொடரும் அதிருப்தியினால் ஒபாமா பதீல் மற்றும் ஹெபா ஆரிஃபா என்ற இரண்டு முஸ்லிம் சகோதரிகளிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஒபாமா வெல்லும் கலையை கற்றுக் கொண்டு விட்டார்.
பதிப்பு தமுமுக .

Tuesday, June 24, 2008

ஒரு லட்சம் சம்பளமா... ? - தமுமுக ஹைதர் அலி பேட்டி

ஒரு லட்சம் சம்பளமா... ? - தமுமுக ஹைதர் அலி பேட்டிதிரு.ஹைதர் அலி அவர்கள்

கேள்வி : தமிழகத்தில் திறமையான ஏராளமான முஸ்லிம் வழக்கறிஞர்கள் இருக்கையில் அவர்களை பணியில் அமர்த்தாமல் நீங்கள் தலைமை வகிக் கின்ற வகஃபு வாரியத்திற்கு லட்சுமி நாராயணன் என்பவரை நியமித்து உள்ளீர்கள். இது எப்படி சரியாகும்? தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம்களுக்காக தனி இட ஒதுக்கீடு முழு அளவில் பெறவேண் டும் என்று போராடி கொண்டிருக்கும் போது முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமனம் செய்தது சரிதானா?

பதில்: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் தமிழகத்தில் முஸ்லிம்களில் ஏராளமான திறமையான வழக்கறிஞர்கள் இருக்கும் போது வக்பு வாரியத்தில் ஒரு இந்து சகோதரனை லட்சுமி நாராயணன் என் கிற வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளீர்கள் இது நியாயம் தானா? அதற்காக போராட்டம் நடத்த போவதாக கூட ஒரு பத்திரிக்கையின் மூலமாக கூட சொல்லி இருக்கிறார்கள்.நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஹதீஸ்களை ஆய்வு நடத்துகிற போது ஹதீஸ் கலை வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு ஹதீஸில் ஒரு அறிவிப்பா ளர் பொய்யராக இருந்தால், அல்லது அவர் பலகீனமாக இருந்தால் அல்லது ஞாபகமறதி உடையவராக இருந்தால், புத்தி சுவதீனம் இல்லாதவராக இருந்தால் அந்த ஹதீஸ்களை நாம் விடவேண்டும். அதற்கு ஒரு ஸஹீஹ் என்ற அந்தஸ்தை தரமுடியாது என்பது ஹதீஸ்களை நாம் பகுத்து பார்க்க வேண்டிய விஷயம். அந்த அடிப்படையில் நீங்கள் இதை பார்க்க வேண்டும். எல்லா விஷயங்க ளுமே குர்ஆன், ஹதீஸ் தான் நமக்கு வழிகாட்டி.

ஒரு விஷயத்தை தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்கிற ஒரு பொய்யன் சொல்கிற எல்லா குற்றச்சாட்டு களுக்கும் பதில் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொய்யன் என்று எப்படி சொல்கிறீர்கள் ஆதாரம் இருக் கிறதா? என்றால் இருக்கிறது.

நான் பதவி ஏற்ற உடனேயே... தமுமுகவால் நடத்தி கொண்டு இருந்த உணர்வு என்கிற பத்திரிக்கை திருடி செல்லப்பட்டு அதை அபகரித்து வைத்து கொண்டு இருக்கிறார்கள் அதில் வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று எழுதினார்கள் 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்று எழுதியபிறகு அவர்கள் இயக்கத்தில் இருக்கக்கூடிய ஜாகிர் உசேன் என்கிற சகோதரன் அவரிடத்தி லேயே (பி.ஜே) என்ன அண்ணன் 1 லட்சம் சம்பளம் என்று எழுதி இருக்கின்றீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே. உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்துள்ளார்கள் என்று அவர் கூறிய உடன் அவர் என்ன செய்திருக்க வேண்டும். அப்படியா? என்று மறுப்பு போட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவரி(ஜாகிர் உசேன்)டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் மானியம் அது இது என்று எல்லா அலவன்ஸ் என்று அது ஒரு லட்சம் வரும் அப்படி என்னன்ன வருகிறது என்று நீங்களும் ஒரு பட்டியல் எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

வக்ஃபு வாரியத்தில் இருந்து வக்பு வாரியத் தலைவருக்கு சம்பளம் தரப் படுகிறதா? என்றால் இல்லை. அந்த புத்திசாலிகளுக்கு இது தெரியாது போலிருக்கிறது. தெரிந்தாலும் பொய் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய்யை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு கொண்டு இருப் பவர்களுக்கு இது பற்றி பிரச்சனை இல்லை.வாகனத் திற்கு டீசல் தரப்ப டும், அதுவும் எப்படி தரப்படு கிறது? ஒரு நாளைக்கு 12 லிட்டர் டீசல், வீட்டு தொலைபேசிக்கு, எனது கைபேசிக்கு கட்டணம் இவைதான் தரப்படுகின்றன. இவைகள் தான் வாரியத் தலைவருக்கு தரப்படுகின்ற மானியங்கள், சலுகைகள்.சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.சி. தமிழ்நாடு தேர்வாணையத்தில் ஒருவரை நியமனம் செய்தார்கள். அப்படி நியமனம் செய்தவுடன் உடனடியாக ஒரு கூக்குரல் பாருங்கள் இடஒதுக்கீடு என்று சொல்லி ''இடஒதுக்கீடும் இல்லாமல் போய்விட்டது. இப்ப இதில் கூட ஒருவர் கூட முஸ்லிம் இல்லை'' என்று கூச்சலிட்டார்கள். உடனடியாக செய்திவருகிறது, நாம் பத்திரிக்கையில் எழுதுகிறோம். முதலில் யாஸ்மீன் அஹமது இருந்தார். அவர் போன பிறகு காசி விஸ்வநாதனை தலைவராக கொண்டு அமைக்கும் போது ஜின்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று நாம் பத்திரிக்கையில் எழுதிய பின்னர் அடுத்த வாரம் (களவாடிய) பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், தப்பு மனிதனுக்கு வராமல் இருக்குமா தவறாக வந்து விட்டது. இதை பத்திரிக்கையில் பெரிதாக எழுதுகிறார்கள். என்று கூச்சலிட்டார்கள்.

நாம் ஏன் இதற்கு கூட பதில் எழுதினோம் என்றால் முதலில் ஒரு தவறு நடந்து இருக்கிறது. வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று சொன்னயோக்கியனே, புத்திசாலியே அதுக்கு இன்னும் ஏன் நீ பதில் சொல்ல வில்லை?

சில நண்பர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். என்ன அவர் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை? என்று கேட்கிறார்கள். அவர்களிடத்தில் நான் சொல்வதெல்லாம் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது என்ன வழிமுறையை எடுத்து கொண்டேனோ அதே போன்று தான் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பொய்யன் தொடர்ந்து பொய் சொல்லி கொண்டு இருந் தால் நாம் பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது.லட்சுமி நாராயணனை நீங்கள் நியமித்தது உண்மையா? பொய்யா? என்றால் உண்மையில் நியமித்து உள்ளோம். ஏன் நியமித் தோம்? முன்பெல்லாம் ஒருவர் கூட இந்து இல்லை. இவர்கள் வந்து நியமித்து விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் வைக்கிறார்கள் ஒன்றும் தெரியாமல் மக்களை மூடர்கள் என்று நினைத்து கொண்டு பிதற்றுகின்றார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில நேரங்களில் சில உண்மைகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.புதிதாக வழக்கறிஞர்களை நியமிக் கும் பொழுது அவர்களுடைய தன்மை அறிந்து நியமனம் செய்கிறோம். பழைய ஆட்களில் யாரெல்லாம் தவறான நபர்கள் என்று தெரிகிறதோ, சாட்சிரீதி யாக யார் இருந்தாலும் நீக்கி விடுகி றோம். லட்சுமி நாராயணனை நாம் எப்படி நியமனம் செய்கிறோம் என்றால், வக்ஃபு வாரியத்திற்கு விசாரணைக்கு வரும் போது அவருடைய வாதத் திறமை விவாதத்தினுடைய தன்மை களை முழுமையாக கிரகித்து கொண்டு தான் நியமித்தோம். பரங்கிபேட்டையில் உள்ள ஒரு சொத்து வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நமக்கு பாதகமாக தீர்ப்பு வந்து, அந்த சொத்து அவர்களுடையது என்று தீர்ப்பு வந்து விட்டது. உடனே வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் ஜின்னா அவர்களை, இடைக்கால தடைவாங்க சொன்னோம். தடை வாங்கி விட்டு என்னிடத்தில் சொன்னார், ''அண்ணன், நான் என்கின்ற முறையில் இடைகால தடை வாங்கி விட்டேன். ஆனால் வழக்கு பலகீனமாக இருக்கிறது என்றார். உடனே சம்பந்தப்பட்ட வக்ஃபுக்குரியவரை கூப்பிட்டு நாங்கள் சொன்னோம். தாங்கள் ஏதாவது வழக்கறிஞர் வைக்க வேண்டுமானால் லட்சுமி நாராயணனை வையுங்கள் என்று கூறினோம்.லட்சுமி நாராயணன் எனக்கு பழக்கமெல்லாம் கிடையாது. லட்சுமி நாராயணன் வாரியத்திற்கு வந்து இரண்டு முறை வாதம் புரிந்து உள்ளார். அப்ப தான் லட்சுமி நாராயணன் பற்றிய செய்திகளை சேகரிக்கிறோம். லட்சுமி நாராயணன், பாட்டன், தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அவர் குடும்பமே வழக்கறிஞர்கள் ஆவர். தாத்தா வக்ஃபு வாரியத்தில் வழக்கறி ஞராக இருந்துள்ளார் இந்திய துணைக் கண்டத்தில் முதன்மையாக உள்ளார். பெங்களூர் சட்டக் கல்லூரியில் தான் படித்துள்ளார். அது மட்டுமல்ல கோல்டு மெடலிஸ்ட்.ஒரு முறை ஒரு சிறிய வழக்கு, அந்த வழக்குக்காக வாதிட வருகிறார். அந்த ஒரு வழக்கு ஒரே தன்மையுடைய இரு வழக்கு, இரு தரப்பினர்கள் வருகிறார்கள். ஒரு தரப்பினர் வழக்கு விசாரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்து விடுகிறோம்.லட்சுமி நாராயணன் மற்றொரு வழக்குக்காக வருகிறார். ஒன்றரை மணி நேரம் அதற்காக வாதிட்டார். 1920, 1950, 1970 பல்வேறு பட்ட கல்கத்தா நீதி மன்றத்தில் சொல்லப்பட்ட வக்ஃபு சட்டங் கள் திருவாரூரில் நடந்த வழக்குகள் மதுரையில் நடந்த வழக்குகளை தன்னு டைய விரல் நுனியில் வைத்து கொண்டு அதற்குரிய நகல்களை எடுத்துத் தந்து வாதிட்டார். நான் மட்டும் அல்ல அங்கு இருக்கக் கூடிய வாரிய உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய வாதத்திற மையை பாராட்டினார்கள். இது மாதிரி யான வழக்கறிஞர்கள் நமக்கு வேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படை யில் தான் அவரிடத்தில் நாம் ஒரு ஆளை அனுப்பி ''நீங்கள் வருவீர்களா?'' என்று கேட்டோம்.வக்பு வாரிய வழக்கறிஞராக இருந்தால் என்ன கிடைக்கும்? வக்பு வாரிய வழக்கறிஞர் என்கிற தகுதி கிடைக்குமே தவிர... பணம் கிடைக்காது. ஒரு வழக்குக்கு அங்கு 15 ஆயிரம் 20 ஆயிரம் என்று வாங்குபவர். வாரியத்தில் நாம் எவ்வளவு கொடுப்போம் 400, 500 ரூபாய் தான் கொடுப்போம் அரசு என்ன நிர்ணயித்து இருக்கிறதோ அரசு என்ன கொடுக்கின்றதோ அதை தான் நாம் கொடுப்போம் அது கூட மிகவும் குறைவாக உள்ளது, அதி கரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.

இந்த புத்திசாலி (?) தமுமுகவில் இருந்து திருடி சென்ற சொத்துகளுக்காக வழக்கு போட்டாரே எந்த முஸ்லிம் வழக்கறிஞரை வைத்து போட்டார்? முஸ்லிம்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற இயக்கம் என்று சொல்கிற ஒரு அமைப் பைச் சேர்ந்த நீ, ஒரு முஸ்லிம் வழக்கறி ஞரை அல்லவா வைத்திருக்க வேண்டும்?

அது மட்டும் அல்ல ஒரு சிறு சம்பவம் பின்னத்தூரில் ஜமாஅத், குடிகாரர்களை வைத்துக் கொண்டு சில பிரச்சனை செய்தார்கள் அப்போது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அந்த புத்திசாலியிடத்தில் போய் ''என்ன செய்ய லாம்?'' என்று கேட்க அதற்கு அவர் கூறியிருக்கிறார்.

''நீங்கள் இந்து வக்கீல் வைத்தால் மட்டும் பத்தாது; ஆர்.எஸ்.எஸ்.(மெண்டா லிட்டி) யுடையவனாக பார்த்து வை; அப்போது தான், ஒரு வெறியுடன் அழிக்க வேண்டுமென்று வேலை செய்வான்'' என்று கூறியிருக்கிறார்.

இவர் தான் இஸ்லாத்திற்காக உழைக்க வந்தி ருக்க கூடிய ''நவீன மிர்ஸாகுலாம்'' என்று கூறிக்கொள்கிறார். இப்படி கூறுகிறார்களே அவர் கூட நீங்கள் இருந்தீர்களே என்று கேட்கலாம். அவரோடு அந்த சம்பாசணை யில் இருந்தவர் சாட்சியாக அல்லாஹ் மீது ஆணையாக நான் சொல்கிறேன். நீ வைக்கிறவனை ஆர்.எஸ்.எஸ். காரனா பார்த்து வை அதுவும் வெறி புடிச்ச இந்துத் துவா காரனக பார்த்து வை அப்பத்தான் அவர்களை அழிக்க முடியுமா?

நாம் வந்த பிறகு இவர் ஒருவரை தான் நியமித்துள்ளோம் அதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்திலும் சரி மதுரையிலும் சரி மற்றபகுதிகளிலும் சரி அதிகமான வழக்கறிஞர் இருக்கிறார்கள். சென்னையில் ரமேஷ் என்பவர் திருநெல் வேலியில் சுப்பிரமணி, சகாயதாஸ், திருச்சியில் அருள் காந்தி, கண்ணன், மதுரையில் செந்தில், தஞ்சாவூரில் வைத்தியலிங்கம், வேலூரில் வீரராகவன், கடலூரில் பத்மநாதன், சக்கரபாணி, இராமநாதபுரத்தில் அற்புத ராஜ், வெங்கட் ராமன், கோபால் சாமி, கோயம்புத்தூரில் பிரபு, விஜய், சேலத்தில் ரங்கநாதன், ஜெகன் நாதன், காஞ்சிபுரத்தில் சக்கர பாணி செங்கல்பட்டு ஜெகன்நாதன் இவர்கள் எல்லாம் இருக்கின்ற முஸ்லிம் அல்லாத வழக்கறிஞர்கள், இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடவே செய்தி தருகிறேன். இதற்கும் சேர்த்தே ஆர்ப்பாட்டம் செய்ய சொல்லுங்கள்.இவர்கள் எல்லாம் நான் வந்து நியமித்தவர்கள் அல்லர் இதற்கு முன்பே போடப்பட்டது. நாம் சில வழக்கறிஞரை தேடிக் கண்டு பிடித்து கொண்டு வந்து வைத்திருப்பதற்கு ஒரு சில சிக்கலான வழக்குகளை பார்ப்பதற்காக வைத்திருக்கி றோம்.

புத்திசாலியே (?) நீ முற்றுகை, ஆர்ப்பாட்டம் பண்ணு மக்கள் உன்னை காரித்துப்புகிறார்கள். இவர் செய்யக்கூடிய குறிப்பாக... இந்த மாதிரியான விஷயங்களில் கூட பாக்கர் சில நேரங்களில் வக்பு பற்றியும் மற்றதை பற்றியும் காரசாரமாக பேசுகிறார் என்று என்னிடத்தில் சொல் கிறார்கள். சிரித்துக் கொள்வேன். என்ன அவர் உள்ளார்த்தமா என்பது எனக்குத் தெரியும். இருக்கக் கூடிய இடத்தில் தன்னுடைய எஜமானன் மெச்சி கொள்ள வேண்டும் என்பதற்காக சில விஷயங் களை செய்து அது மாதிரியான அங்கு நடக்கக்கூடிய பொம்மலாட்டம்

பல இடங்களில் ''ஏய் அந்த ஆள் நல்லாதான் செய்கிறான். அந்த ஆளு வக்ஃபு வாரியத் தலைவரான பிறகு தான் வக்பு வாரியம் நல்லா இருக்கிறது'' என்று பாக்கர் பல இடங்களில் சொல்வது சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். அவர் மேடையில் பேசுவதற்கும் அவர் உள்ள ரீதியாக இருப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. அவர் மனம் வெதும்பிக் கொண்டு வேதனை யோடு அந்த விஷயத்தை சொல்ல வேண்டும். ஏன் என்றால் சில விஷயங் கள் காப்பற்றப்பட வேண்டும். எனவே பாக்கர் சொல்வதை நீங்கள் (மக்கள்) எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் அவர் உள்ளத்திற்கு தெரியும் முன்பெல்லாம் நானும் அவரும் பேசி கொள்வோம். போன் செய்து பேசுவேன்; இன்றைக்கும் பெருநாள் வந்தால் வாழ்த்து செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்புவேன். முதலில் வருவார் இப்ப வருவதில்லை. நட்புரீதி யாக வேறு நானும் பாக்கரும் 38 நாள் ஒன்றாக சிறையில் இருந்திருக்கி றோம். ஒரே அறையில் இருந்தோம். என்னைப் பற்றி முழுமை யாக அவருக்கும் பாக்கரை பற்றி முழுமையாக எனக்கும் தெரியும். நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் 3 நாள்கள் நீங்கள் பிரயாணித்தீர்கள் என்று சொன்னால் அவர்களை பற்றி தெரியும் 38 நாள் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கி றோம். பாக்கருன்னா யாருன்னு எனக்கு தெரியும். ஹைதர் யார் என்று பாக்கருக்கு தெரியும். எனக்கு என்ன வருத்தம் என்றால் தன்னுடைய உரத்த குரலில் பேசக் கூடியவர் பல நேரங்களில் நிர்வாக குரலில் நியாயமான விஷயங்களை பேசுவதில் ஒரு ஆளாக இருந்தவர் பழைய நண்பர் பாக்கர் இன்றைக்கு இல்லை என்கின்ற வருத்தம் இன்றைக் கும் உண்டு. மனிதருக்கு சில நேரங்களில் தேவைகள் அதிகமாகி விடுகிற நேரங்களில் இப்படியெல்லாம் தவறு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நாம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.ஒருவர் குற்றச்சாட்டுகள் வைப்பதி னால் அதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் நாம் இல்லை. நம்முடைய வேலைகள் அதிகம் என்னுடைய சுயவேலைகள் செய்வதில் கூட நான் முடங்கிக் கிடக்கின் றேன். சில விஷயங்களை முதன்மை செயலாளரிடம் ''இது ஏன் இப்படி உள்ளது பழையது இப்படி நடந்துள்ளதாமே'' என்றால் ''என்ன சார் எனக்கு தெரிய வில்லை உங்களுக்கு செய்தி தெரிகிறது'' என்று திகைக்கின்ற மதிரியாக தான் வைத்துள்ளோம். இன்றைக்கு வக்ஃபு வாரியத்தில் பழைய நிலை இல்லை. ஆள்கள் குறைவாக இருக்கிறார்கள். அதற்கு அரசிடம் அனுமதியை கேட்டு உள்ளோம். வேலை வாய்ப்பு அலுவலகத் தில் கேட்டு எட்டு மாதங்கள் ஆகிவிட் டன. பல நினைவூட்டு கடிதம் அனுப்பி விட்டோம். இன்னும் அவர்கள் அந்த பட்டியலை தரவில்லை. ஏன் என்றால் நாம் முஸ்லிம்கள் மட்டும் தான் வேண்டும் என்று கேட்டு உள்ளோம் வக்ஃபு வாரியத்தில் இது மாதிரியான பணிகளில் தான் பார்க்க முடியும். வக்ஃபு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாதவர் இருக்கி றார்கள். ஒருவர் இறந்து விட்டார். சந்திரன் என்பவர் ஒருவர் இன்றும் இருக்கிறார். வந்த உடனே அவரை டிஸ்மிஸ் பண்ணி அனுப்பிவிட முடியுமா? அது மட்டும் அல்ல பணியில் இருக்கும் போது ஒருவர் இறந்து விட்டால். கருணை அடிப்படை யில் வேலை கொடுக்க வேண்டும். அதே போல் முஸ்லிம் ஒருவரும் பணியில் இருக்கும் போது இறந்துள்ளார். கருணை அடிப்படையில் அவருக்கு வேலை கொடுத்து உள்ளோம்.நான் வந்த பிறகு கருணை அடிப் படையில் ஒரு இந்து பெண்ணுக்கும் வேலை கொடுத்து இருக்கிறேன். அதுக்கும் சேர்த்து போராட்டம் நடத்த நியாயம் அநியாயம் பார்க்க வேண்டாமா?இனத்தின் பெயரால் அவருக்கு ஏன் அநியாயம் இழைத்தாய்? என்று கேட்டால் அல்லாஹ்விடத்தில் நான் அல்லவா பதில் சொல்ல வேண்டும். உனக்கு அது பற்றி ஒன்றும் கிடையாது. அல்லாஹ் வுடைய நம்பிக்கை இருக்கின்றவனா இல்லையா என்பது எங்களுக்கு தான் தெரியும் எங்களை பற்றி நீ நன்றாக பேசு, திட்டு; என்ன வேண்டும் என்றாலும் பேசு, எதை பற்றியும் நாம் கவலைப்பட போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் சொல் கிறார்கள் திட்டுகின்றவன் என்ன திட்டி னாலும் திட்டுபவனைத்தான் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள். அதனால் புத்திசாலியே(?) எல்லாத்தையும் நீயே வாங்கிக்கட்டிக் கொள் பிரச்சனை இல்லை.நன்றி : தமுமுக இணையத் தளம்


முகவை தமுமுக வின் கல்வி உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இராமநாதபுரத்தில் தமுமுக வின் கல்வி உதவி இராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்!
இரத்த தானம் செய்தீடுவீர்! மனித உயிர் காக்க உதவிடுவீர்!!
வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்போம்! மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!





















சிங்கப்பூரில் இரத்த தான முகாம்



சிங்கப்பூரில் இரத்த தான முகாம்


வரும் ஜீன் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் தமிழ்நாட முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சிங்கப்பூர் கிளை மாபெரும் இரத்த தான் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தள்ளது.
மனித நேயம் மிக்க இப்பணியில் பங்களிக்க விரும்புவோம் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு 92282984 (சகோ. அக்பர் அலி) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு சிங்கப்பூர் தமுமுக கேட்டுக்கொள்கின்றது.
செய்தி : தமுமுக சிங்கப்பூர்

Monday, June 23, 2008

அன்புள்ள அம்மா...

அன்புள்ள அம்மா...


அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக்கவனம் பெற்றன.

அந்த நூல்கள் அவருள் பிரளயத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்டஉதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள். தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.

சென்னை டெபுடி கமிஷ்னர் காமினியின் அழைப்பின் பேரில் தமுமுக வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.

இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம். -ஆசிரியர்.



அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக்கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.

என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு. யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத் திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை. கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன். இதில் எந்த ஒரு உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன். உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள். மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு..

ரஜிதா (எ) ஹமிதா


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்