Friday, May 16, 2008

ஜெய்பூர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தூக்கிலிட தமுமுக கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்து சமூகப் பெருமக்களின் வழிப்பாட்டுத் தலம் உள்பட பொது மக்கள் கூடுகின்ற இடங்களில் நடைபெற்ற இந்த மனித நேயமற்ற குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் காட்டுமிராண்டிகளாகத்தான் இருக்க முடியும். இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உச்சப்பட்சத் தண்டனையான தூக்குத் தண்டை விதிக்க வேண்டுமென தமுமுக கோருகிறது.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு முறையும் காவல்துறை சரியான குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகக் கூறிக் கொள்கிறது. ஆனால் சரியான முறையில் விசாரணை செய்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் அப்பாவிகளைக் கைது செய்து கணக்கு காட்டுவதால் தான் இந்தப் பயங்கரவாத தாக்குதல்கள் தொடருகின்றன. எனவே மத்திய அரசு இந்த உண்மைகளை கவனத்தில் கொண்டு நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு புலனாய்வுக் குழுவொன்றை அமைத்து இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு சரியான குற்றவாளிகளைக் கைது செய்தால்தான் ஜெய்பூரில் நடைபெற்றது போல துயரச் சம்பவங்கள் இனியும் தொடராமல் தடுக்க இயலும்.

Wednesday, May 14, 2008

விளம்பர நோக்கிற்காக செயல்படும் அமைப்பு ததஜ

விளம்பரத்துக்காக வழக்கு: த.த.ஜ.விற்கு உயர்நீதிமன்றம் அபராதம்!

சென்னைப் பல்கலைக் கழகத்தின் பணிநியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றவில்லை, எனவே, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என அறிவிக்கக்கோரி த.த.ஜ.வின் வக்கீல் சிராஜுதீன் மூலம் அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் செய்யது இக்பால் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகோபாத்தியாயா, எம். வேணுகோபால் ஆகியோர், பணியிடங்கள் தொடர்பாக பொதுநல வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பாக நாளிதழ்களில் இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளதால் இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே வழக்கு தாக்கல் செய்த த.த.ஜ மாநிலச் செயலாளர் செய்யது இக்பால் 10 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தில் 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

விளம்பர நோக்கிற்காக செயல்படும் அமைப்பு என்று உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ததஜ) என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Tuesday, May 13, 2008

கயவர்களின் காட்டுமிராட்டித்தனம்.....டிசம்பர் 6,1992. ஒரு வீடியோ பார்வை......

வேலூர்க் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை

இன்று வேலூர் கோட்டை மசூதியை மீட்போம்! நாளை பாபர் மசூதியை மீட்போம்! என்ற எழுச்சிகரமான வாசகங்களுடன் மக்கள் கூட்டம் அலை அலையாக வேலூர் கோட்டையை சுற்றி வளைத்து இந்தியாவிலேயே திரும்பி பார்க்க வைத்துவிட்டனர். (புகழ் அனைத்தும் இறைவனுக்கே!)

மே 9 கோட்டை மதில் சுவரை தாண்டி உள்ளே செல்வோம்! பள்ளியை மீட்போம்! என்ற முழுக்கம் வேலூர் மாவட்டத்தையே கிடுகிடுக்க வைத்துவிட்டது. ஒருவாரத்திற்கு முன்பிருந்தே மீடியாக்கள் மிருந்த முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்தன. காவல்துறையோ... தொடர்ந்து மிரட்டும் வண்ணம் செய்திகளை வெளியிட்டு வந்தது. ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தலைமையில் 1 டி.ஐ.ஜி. பல மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏராளமான டி.எஸ்.பி.க்கான இன்ஸ்பெக்டர்கள் என பல மாவட்டங்களிலிருந்தும் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு பணியில் முதல் நாளிலிருந்தே ஈடுபட தொடங்கினர். கோட்டையை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு காகம் கூட மிரளும்படியாக கோட்டையை போலிஸ் சுற்றிவளைத்தது. கோட்டையின் மதில் சுவர்களில் துப்பாக்கியுடன் போலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்தக் காலத்தில் எதிரிப்படையினர் முற்றுகைக்கு வரும்போது அரசன் கோட்டையை காப்பாற்றுவதற்கு எப்படியெல்லாம் காவல்துறையின் ஏற்பாடுகள் இருந்தன. முதல் நாள் இரவிலிருந்தே வேலூர் பதற்றத்தில் ஆழ்ந்தது.

மே 9 அதிகாலை கோட்டையை சுற்றிலும் பரபரப்பு கூடுதலானது. அதற்கேற்க அன்றைய தினம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (வேலூர் பதிப்பு) நாளேடு எல்லார் பார்வையும் தமுமுகவின் மீது என தலைப்பிட்டு பரபரப்பை மேலும் கூடியது. தண்ணீரை பீய்ச்சியடிக்கும் நான்கு வஜ்ரா வாகனங்கள் மூன்று தீயணைப்பு வண்டிகள். இரண்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனங்கள், கோட்டை அகழிக்கள் குதித்து நீந்தி உள்ளே செல்பவர்களை பிடிக்க ஐந்து பட்டு மீட்புக்குழுக்கள் என கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை தயார் நிலையில் வைத்திருந்தது. இவையெணைத்தும் தமுமுகவின் 1997 டிசம்பர் 6 போராட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக இருந்தது. முதல் நாளே தமுமுகவின் தலைவர் ஜாவஹிருல்லாஹ் வேலூரில் தலைமறைவாக இருந்தபடியே பணிகளை முருக்கிவிட்டுக் கொண்டிருந்தார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி, மாநிலச் செலாளர் பி.அப்துஸ் ஸமது, தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் ஜெ.அவுலியா ஆகியோரும் முழுவீச்சில் ஒருங்கிணைப்பு பணிகளை செய்த வண்ணம் இருந்தனர். அடுத்த நாள் காலை மாநிலச் செயலாளர்கள் தமிமுன் அன்சாரி, காஞ்சி ஜுனைத். மதுரை கௌஸ் ஆகியோரும் பணியில் இணைந்துக் கொண்டனர்.
காலை 10 மணிலிருந்தே மக்கள் கூட்டம் வேலூரின் பல பகுதிகளிலும் அணி திரள தொடங்கினர். கோட்டையின் அனைத்து வாசல்களும் பூட்டப்பட்டதால், கோட்டையின் பின் பகுதியிருந்து பேரணியான புறப்படுவது என திட்டமிடப்பட்டிருந்தது. 11 மணிக்கெல்லாம் கூட்டம் சாரை, சாரையாக திரளத் தொடங்கியது. வெளிமாநிலங்களை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் டி.வி. கேமரா மேன்களும் பெரும் திரளாக திரண்டு வந்திருந்தனர். கூட்டம் ஆரம்பத்திலேயே கட்டுக்கடங்காமல் திரண்டதால் அவர்களை ஓழுங்குப்படுத்தும் பணியில் தமுமுகவினர் படுதீவிரமாக களத்தில் குதித்தனர்.

இதற்கிடையே காவல்துறை போக்குவரத்தில் மாற்றங்களை செய்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் திட்டமிட்டபடி கோட்டையின் பின் பகுதிக்கு வருவதற்கு நேரமாகும் நிலை ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரி சாலையில் காவல்துறை ஏற்படுத்தியிருந்த தடுப்புகள் உடைக்கப்பட்டு, தடுப்பு அரண்களை தமுமுகவினர் அகற்றி வாகனங்களை நேரடியாக களத்துக்கு வரும்படி பாதை அமைத்தனர். இதை போலிஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுபோல் மக்கான் சாவடி என்ற இடத்தில் மக்கள் சூழ்ந்துக்கொண்டு கோட்டை நோக்கி நகர்ந்ததும், அவர்களை காத்திருக்கும்படி வேண்டுகோள் விடப்பட்டது. உடனே அவர்கள் திரும்பி பதுங்கி காவல்துறையை குழப்பத்தில் ஆழ்த்தினர். பதறிப்போன காவல்துறை புதிய திட்டமிடல்களை போட்டு தடுப்பு அரண்களுடன், கயிறுகளையும் கட்டத் தொடங்கினர்.

ஆங்காங்கே தீவுத்தீவாக நின்ற கூட்டம் திடிரென ஒன்று சேர்ந்ததும், படுவேகமாக ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. திடிரென ஒரு கூட்டத்தின் ஒரு பகுதியினர் தடையை உடைத்து கோட்டை சுவரை நோக்கி ஒடினர். கோட்டையை சுற்றிலும் அறுபதடி நீள அகலத்தில் அகழி இருந்தது.

கூட்டத்தின் ஒரு சாரார் அகழியில் குதித்து கோட்டைக்குள் நீந்தி செல்லும் முடிவோடு தடுப்பை உடைத்து பாய்ந்து ஒடினர். இன்னொரு கூட்டம் காவல்துறையின் ஐந்தாவது பாதுகாப்பு வளையத்தை உடைத்து தாண்டி ஒடினர். ஒரே நேரத்தில் இரு சம்பவங்கள் நடந்ததால் திணறிப்போன காவல்துறை கூடுதல் காவலர்களுடன் களமிறங்கி அகழியை நோக்கி ஒடியவர்களை தடுத்து நிறுத்தியது. ஐந்தாவது பாதுகாப்பு வளையத்தை தாண்டியவர்களும் காவல்துறையால் பிரிக்கப்பட்டார். இந்த பரபரப்புக்கிடையே தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச்.ஜாஹிருல்லாஹ் ஒரு ஆட்டோவில் வர அவரது ஆட்டோ போக்குவரத்து நெரிசலால் குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்கு தாமதமானது. ஆரம்பத்தில் சுமார் பத்தாயிரமாக இருந்த கூட்டம் தொடர்ந்து பல மடங்காக பெருகிக் கொண்டே போனது. மணி பணிரெண்டை தாண்டியதும், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி கூடியதற்கான நோக்கத்தை விவரித்து தொடக்க உரையாற்றினார். அதன் பிறகு தமுமுக தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் உரையாற்றினார். கோட்டைக்குள் செல்லும் நோக்கத்தை எடுத்துரைத்ததும் கூட்டம் அல்லாஹு அக்பர் என்று கம்பீரமாய் முழங்கி புறப்பட்டது. அணை ஒன்று உடைத்து காட்டாற்று வெள்ளம் சீறுவதுப் போல் கூட்டம் ஆர்ப்பரிப்புடனும் அடங்காத ஆவேசத்துடனும் புறப்பட, போலிஸாரின் வாக்கி லி டாக்கி கருவிகள் அலரத் தொடங்கியது. அந்த நீளமும், அகலமும் கொண்ட சாலையில் போர் வீரர்களின் கோபத்தோடு கூட்டம் கோட்டை நோக்கி போருக்கு செல்வதும் போல் ஒடிய காட்சி பார்போரை திகிலடைய செய்தது.

சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான இந்துக்களும் பிற மக்களும் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். காவல்துறையின் பாதுகாப்பு வளையங்கள் ஒன்றன் பின் முன் படுத்தி கோட்டையை நோக்கி நெருங்க, பேரணியின் நடுப்பகுதி அப்போதுதான் மக்கான் சாவடி அருகே வந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் திரல் நீண்டுக்கொண்ட போனது. பேரணியின் முன்னாள் சென்றவர்கள் காவல்துறையின் அடுத்தடுத்த தடுப்புகளை உடைத்து ஆவேசமுடன் கோட்டை நோக்கி முன்னேறினர். காவல்துறைக்கும், தமுமுகவினருக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது. பாய்ந்து சென்ற தமுமுகவினர் அடுத்தடுத்து தடுத்து தூக்கியெறியப்பட்டனர். ஏராளமானனோர் தடுப்பு அரண்கள் மீது தாண்டும் போது கீழே விழுந்தனர்.
அனைத்து முயற்சிகளையும் காவல்துறை முறியடித்ததால், கோட்டை வாசலுக்கு வெளியிலேயே தமுமுக ஜும்ஆ தொழுகையை நடத்தும் என அறிவிப்பு செய்யப்பட்டது. உடனடியாக சாலையில் பாங்கு சொல்லப்பட்டது. ஏராளமான மக்கள் வரும்போது தொழுகை நடத்த வசதியாக திண்டுகளுடன் வந்திருந்தனர். தண்ணீர் கிடைத்தவர்கள் ஓலு செய்ய, தண்ணீர் கிடைக்காதவர்கள் தயம்மம் செய்துக்கொண்டனர்.

தமுமுக தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஜும்ஆ பேருரையை நிகழ்த்த சுட்டெரிக்கும் 107 டிகிரி வெயிலில் கூட்டம் வியர்க்க, வியர்க்க உரையை கவனித்துக் கொண்டிருந்தது. மறுபுறம் பேரணியில் மக்கள் கூட்டம் வந்துக்கொண்டேயிருந்தது. அவர்கள் ஒலு செய்ய வசதியாக எல்லோருக்கும் தண்ணீர் பாக்கெட்டுகள் இலவசமாக தாரளமாக வழங்கப்பட்டது.

சரியாக மதியம் 1:15 மணியளவில் தொழுகையை வேலூர் மாவட்ட உலமா அணி செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி தொழுகையை தொடங்கினர். 30 ஆயிரமா? 50 ஆயிரமா? என மக்கள் கூட்டத்தை அளவிட முடியாத காவல்துறை தொழுகையின் போது வரிசையாக கணக்கெடுக்க முயன்று அதிலும் தோற்றது.

காரணம் தொழுகையின் முதல் ரக்கையத் முடிந்த பிறகும் கூட்டம் ஆயிரத்தை தாண்டி வந்துக் கொண்டிருந்தது. அவர்கள் தொழுகையின் அடுத்தடுத்த நிலைகளில் இணைய தொழுகை முடிந்தது. பெரும்பாலும் வேலூரில் மதியம் 1:30 மணிக்கு பிறகுதான் ஜும்ஆ நடைபெறும் என்பதால் கூட்டம் அதை நினைத்துக் கொண்டு தாமதமாக மேலும் வர அவர்களது எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. எனவே இரண்டாவதாக வந்தவர்கள் ஜமாத்தாக தொழ, அதேபோல் மூன்றாவதாகவும் கடைசியாகவும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வர அவர்களுக்காக மூன்றாவது ஜமாத்தும் நடத்தப்பட்டது. அந்த சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் தரையில் தொழுதவர்களின் தியாகம் மாகாத்தானது.

107 டிகிரி வேலூர் வெயிலில் வெறும் காலோடு தொழுகையில் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக நின்றது பெரும் தியாகமாகும்.
அதுபோல் தரையில் முழங்கலை வைத்தப்போதும் சஜ்தா செய்ய உள்ளங்கையையும், நெற்றியையும் கொதிக்கும் தரையில் வைத்தல் போலும் எல்லோருமே துடித்துவிட்டனர்.! ஆம் அல்லாஹ்வின் ஆலயத்துக்காக அந்த வெப்பத்தை பொறுத்துக் கொண்டனர்.! அப்போது எங்கும் உணர்ச்சி மயமான இருந்தது அடுத்து என்ன நடக்குமோ என அழகு வகையான அமைதி நிலவிய போது போலிஸார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகங்களை எடுத்துவந்து எல்லோரையும் கைது செய்தனர்.

அப்போதும் கடைசி முயற்சியாக ஏராளமான தமுமுகவினர் மீண்டும் தடையை உடைத்து பாய, ஐ.ஜி.ராதாகிருஷ்ணனோ நேரில் வந்து தடைமீறலை தடுத்து நிறுத்தினார். அப்போது தள்ளுமுள்ளு மீண்டும் ஏற்பட தடையை தாண்டியவர்கள் மீது காவல்துறை தடிகளை கொண்டு தாக்கியது. பலர் ஊமைக் காயமடைய, சென்னையை சேர்ந்த அப்ஃரோஸ் என்பவரின் மண்டை உடைந்தது. ஏற்கனவே அங்கே மதுராந்தகம் சென்னை கே.கே.நகர் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. அதில் ஒன்று விரைந்து வர அடிபட்ட ரத்தம் வழிந்த தமுமுக சகோதரர் மருத்துவமனைக்கு விரைந்து தூக்கி செல்லப்பட்டார்.

அதன் பிறகு ஐ.ஜி.யின் கவனத்துக்கு பிரச்சனை சென்றது. தொடர்ந்து காவல்துறை தமுமுகவினரை சிறைபிடிக்கத் தொடங்கியது. பேருந்துகளிலும், போலிஸ் வேன்களிலும் நெருக்கிய பிடித்தது, மத்திய தொல் பொருள் ஆய்வுத்துறையே கண்டித்து முழக்கம் எழுப்பியபடியே ஏறிசென்றனர்.

தொடர்ந்து 5 ஆயிரத்தை தாண்டி கைது சென்றுக் கொண்டிருந்த போது போலிஸ் ஏற்பாடு செய்திருந்த 10 மண்டபங்களும் நிறைந்து விழிந்தது.

அதற்கு மேல் கைது செய்யப்பட்டவர்களை எங்கு கொண்டு செய்வது என்று தெரியாமல், காவல்துறை வாகனங்கள் வேலூரை சுற்றிக் கொண்டிருந்தன. கடும் வெயிலில் மக்கள் கொந்தளிக்கவும் அவர்களை ஆங்காங்கே சாலைகளிலேயே அவர்களை இறக்கிவிட்டு போலிஸ் வண்டிகள் ஓட்டம் பிடித்தன. ஆனால் கூட்டமோ எதிர்பாராத வகையில் எண்ண முடியாத வகையில் கைதுக்காக காத்திருந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை விட கைது செய்யப்படாமல் சாலையில் நின்றவர்கள் 5 மடங்கு 6 மடங்கு என போலிஸார் பின்னர் தெரிவித்தனர். அவர்களை கலைந்துப் போகும்படி வேண்டுகோள் விடுமாறு தமுமுக தலைவரை, உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். நிலைமையை சமாளிக்க காவல்முறையால் முடியவில்லை. நடந்த நிகழ்வுகளும், கூட்டத்தின் எண்ணிக்கையும் எழுச்சியும் 1997 டிசம்பர் 6 போராட்டத்தை அப்படியே நினைவுப்படுத்தியது.

அதன் பிறகு தமுமுக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கைது செய்யப்படாத மக்கள் கலைந்து செல்ல தொடங்கினர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பார்ப்பதற்காக தமுமுக தலைமை நிர்வாகிகள் மண்டபங்களுக்கு சென்றனர். அங்கே போலிஸார் மக்களை உணவு கொடுத்து உபசரித்தாலும் கைதை ஒழுங்காக பதிவு செய்ய போதிய காவலர்களை நியமிக்க வில்லை. இதனால் மக்கள் கோபமடைந்தனர். ஒரு காவல்துறை அதிகாரி எதிர்பாராத வகையில் கூட்டம் பன்படங்கு வந்துவிட்டது. உங்கள் பலத்தை உளவுத்துறையும், மீடியாக்களும் பார்த்துவிட்டன. எனவே பெயர் பதிவு முக்கியமில்லை, எனவே பிரச்சனை செய்யாமல் தயவு செய்து போய்விடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். அதோடு அனைத்து சிறை மண்டபங்களும் திறந்துவிடப்பட்டன.

மக்கள் கூட்டம் வேலூரிலிருந்து வெளியேற... தொடங்க நீண்ட நேரமாயிற்று. திப்பு சுல்தானின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சி செய்தனர். அப்போது முஸ்லிம்கள் வேலூரில் பிரனயமாய் புகுந்தனர். 2008 ஆம் ஆண்டில் 202 ஆண்டுகள் கழித்து அதே கோட்டையை நோக்கி முஸ்லிம்கள் திப்புசுல்தானின் வாரிசுகள் தொழுகை நடத்திய பள்ளிவாசலை மீட்க பிரனயமாய் புறப்பட்டு வந்தனர்.
ஆம்! வரலாறு புதிய ஆத்தியாங்களோடு தொடர்கிறது. இது தொடக்கம் தான் என்பதை புரிய வேண்டியவர்கள் புரிய வேண்டும்!

உதயமானது தமுமுக மகளிர் அணி...

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்!
எழுச்சிகரமான தீர்மானங்களுடன் கூடிய தமுமுக மகளிர் அணி மாநில செயற்குழு


சமுதாயத்தில் நடக்கும் அநியாயங் களை தட்டிக் கேட்பதற்கும், மறுக்கப் பட்ட உரிமைகளைப் போராடி பெறுவதற் கும் சமுதாய ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற முஸ்லிம் பெண்களின் போர்க்குரல் தமுமுக மாநில மகளிரணி செயற்குழுவில் எதிரொலித்தது. இஸ்லாமிய அடிப்படையில் சமுதாயத் தொண்டாற்றிட மகளிருக்கும் களம் அமைத்து கொடுப்பதற்கான முதன் முயற்சியாக மகளிரணியின் மாநில செயற்குழு திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள ஜெம் பேலஸ் அரங்கில் கடந்த 27.04.2008 அன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 80 பெண்கள் மாவட்ட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில், சகோதரி சாஜிதா அவர்களின் திருக் குர்ஆன் விளக்கவுரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. சகோ.கோவை சாதிக் அறிமுக உரை நிகழ்த்தினார். தமுமுக வின் செயல்பாடுகள் மற்றும் பொதுவான தலைப்புகளில் சகோதரிகளின் கேள்விகளுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி பதிலளித்துப் பேசினார். மகளிர் அணி தொடர்பான பல்வேறு விளக்கங்களும் சகோதரிகளின் ஆலோசனைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தங்கள் சமுதாயப் பணிக்கு எங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப் பும் தேவை என நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆபாச, கலாச்சார சீர்கேடுகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களை தடை செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். 20லி20 கிரிக்கெட் போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஆடும் ஆபாச நடனத்தை நிறுத்த வேண்டும், விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுடன் எழுச்சியாக தொடர்ந்த செயற்குழுவில் இறுதியாக தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நிறைவுரையாற்றினார். முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய கட்டமைப்பில் பேணுதலாக சமூக பணிகளை ஆற்றுவது எப்படி என்று விளக்கிய பேராசிரியர் அவர்கள், ஸஹாபா பெண்கள் வாழ்விலிருந்து மேற்கோள்களை காட்டி மகளிர் அணி செயல்பட வேண்டிய விதத்தை எடுத்துரைத்தார்.

சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார சீர்கேடுகள், முஸ்லிம் பெண்களிடையே உள்ள மூடநம்பிக்கைகள், சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களின் மீதான மோகம் ஆகியவற்றை ஒழிக்கவும் மார்க்க மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் சூளுரைத்தவர்களாக, மகளிர் அணி வீராங்கனைகள் புறப் பட்டனர். முஸ்லிம் சமுதாயத்தின் சரிபாதி யாக உள்ள முஸ்லிம் பெண்களிடையே மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக் கையை மகளிர் அணி செயற்குழு ஏற்படுத்தியுள்ளது.
செயற்குழுவுக்குப்பின் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. செயற்குழுவுக் கான ஏற்பாட்டை திருச்சி மாவட்டத் தலைவர் ஹக்கீம், செயலாளர் அப்துர் ரஹீம், பொருளாளர் பைஸ் அஹ்மது தலைமையிலான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



மகளிர் அணி நிர்வாகிகள்

மாநில மகளிர் அணிச் செயலாளர் சகோதரி. கோவை சாஜிதா (க/பெ.கோவை சாதிக் மாநில துணைச் செயலாளர்)

மாநில மகளிர் அணி பொருளாளர் : டாக்டர் எஸ்.ஷமீமா (க/பெ.பொறியாளர் ஷாநவாஸ் குவைத் மண்டலச் செயலாளர்)

து.செயலாளர் : சகோதரி ரஹ்மத் நிஷா ஆலிமா (க/பெ. மர்ஹும் அப்துர் ரஹீம்)

து.செயலாளர் : சகோதரி ஷரீபா (க/பெ.ஜைனுல் ஆபிதீன் மாநில செயற்குழு உறுப்பினர்)